22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
a99d11d2 55e9 4fc2 aa0a 32ba7bbcbfa0 S secvpf
பழரச வகைகள்

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

கேரட் – 3,
தக்காளி – 3,
பீட்ரூட் – 1,
பாகற்காய் – சிறியது 1,
சுரைக்காய் – சிறியது 1,
முட்டைகோஸ் – 25 கிராம்,
இஞ்சி – மிகச் சிறிய துண்டு,
ஓமம் – அரை டீ ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு, ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை:

• ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு, ஓமத்தை ஊறவைக்கவும்.

• கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஜூஸாக அரைக்கவும்.

• இதனுடன் ஓமம் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு, ஐஸ் துண்டுகள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைக்கவும்.

• டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் மிகவும் சத்து நிறைந்தது.

பலன்கள்: கேரட், தக்காளியில் வைட்டமின் ஏ இருக்கிறது. மேலும், பீட்ரூட், முட்டைகோஸ், பாகற்காய் போன்றவற்றில் இருந்து பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, ஃபோலேட் (Folate), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை கிடைக்கும். இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல் பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். புற்றுநோய் வராமல் தடுக்க, இந்த ஜூஸ் அருந்தலாம். எலுமிச்சைச் சாறு மூலம் வைட்டமின் சி, கே கிடைக்கும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.
a99d11d2 55e9 4fc2 aa0a 32ba7bbcbfa0 S secvpf

Related posts

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்

nathan

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

பாதாம் கீர்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

கோடை வெப்பத்திற்கு இதமான மாம்பழ ஜூஸ்

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan