30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl532
சைவம்

மீல்மேக்கர் சோயா குழம்பு

தேவையானபொருள்கள்:
சோயா உருண்டை – 1 கப்
மீல்மேக்கர் – 50 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சாம்பார்பொடி – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள
பூண்டு – 10 பற்கள்
தேங்காய் – ஒரு கீத்து
சோம்பு – ஸ்பூன்
பூண்டு – ஒரு பல்
முந்திரி – 2
தாளிப்பதற்கு:
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ஸ்பூன்
சோம்பு – ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்
எண்ணெய் – 6 ஸ்பூன்

செய்முறை :
மீல் மேக்கரை வெந்நீரில் 10 நிமிடம் ஊற விட்டு பின் குக்கரில் ஒரு விசில் சத்தத்திற்கு வேக வைத்துக் கொண்டு தண்ணீரை இறுத்து விடவும். உப்பு, புளியைத் தண்ணீரில் கரைத்துக் கொண்டு (6 டம்ளர்) சாம்பார் பொடி சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிப்பவைகளைப் போட்டு சிவந்தது பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை நறுக்கிப் போட்டு வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி, கொதித்த  மணி நேரம் கழித்து வேகவைத்த சோயா உருண்டைகளை சேர்த்து விடவும். உப்பு, புளி, காரம் அனைத்தையும் சோயாவில் சார்ந்ததும். குழம்பு கெட்டியானதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்துக் கலக்கி கொதித்ததும் இறக்கவும்.
sl532

Related posts

ராகி பூரி

nathan

பீட்ரூட் பொரியல்

nathan

நெய் சாதம் வைப்பது எப்படி

nathan

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

nathan

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

nathan

கோவைக்காய் அவியல்

nathan

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan