அறுசுவைசைவம்

பன்னீர் மசாலா

தேவையான பொருட்கள் :

ராஜ்மா  – ஒன்றரை கப்,
பன்னீர் – 150 கிராம்,
வெங்காயம் – 2 (நடுத்தரமான அளவில்),
தக்காளி – 2,
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன்,
மஞ்சள் போடி – அரை டீஸ்பூன்,
மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன்,
மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்,
சீரகப்பொடி – அரை டீஸ்பூன்,
கரம் மசாலா – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

Related posts

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

வாங்கிபாத்

nathan

சோயா உருண்டை குழம்பு

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்

nathan

காலிஃப்ளவர் 65

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan