31.1 C
Chennai
Monday, May 20, 2024
su1
சைவம்

சுண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தாளிக்க :
கடுகு
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம்

செய்முறை :
* சுண்டைக்காயை ஒன்றும்பாதியாக தட்டி வைக்கவும்
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின்னர் அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இப்போது ஒன்றும் பாதியாக தட்டி வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு மிதமான தீயில் வதக்கவும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்க கூடாது.
* நன்றாக வதங்கியதும் கடைசியாக சிறிது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.su

Related posts

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் உருளைக்கிழங்கு முட்டை பொரியல்

nathan

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

வடை கறி

nathan

புளியானம்! வாசகிகள் கைமணம்!!

nathan