31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

மஷ்ரூம் புலாவ்

தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் – 100 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 3
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தலா 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தயிர் – சிறிதளவு
பால் – அரை கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

• குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.

• பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும்.

• நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

• பிறகு அரை கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 3 விசில் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

• பரிமாறும் போது சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

• சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.

Related posts

வாங்கிபாத்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்

nathan

பூண்டு சாதம்

nathan

தேங்காய் சாம்பார்

nathan

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

நாண் ரொட்டி!

nathan

மஷ்ரூம் ரைஸ்

nathan