29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
வாழைத்தண்டு கூட்டு செய்முறை முக்கிய புகைப்படம்
சைவம்

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால், தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

இயற்கையில் மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப்பொருட்கள் அதிகம் உள்ளது. அந்த உணவுகளை வாரம் ஒருமுறையோ தினசரி உணவிலோ சேர்த்து வருமபோது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அந்த வகையில் இயற்கையின் ஆரோக்கிய நன்மைகள் வழங்குவதில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாழையின் அனைத்து பகுதிகளும் மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்தரக்கூடியதாக உள்ளது.

 

வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் என ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களையும் நமக்கு கொடுக்கிறது. இதில் வாழையில் இருக்கும் தண்டு தனித்துவமான பல நன்மைகளை கொடுக்கிறது.

இதில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால், தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது .

இந்த வாழைத்தண்டு சூப் சிறுநீரக கற்களை அகற்றும் தன்மை கொண்டுது. இப்படி பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைத்தண்டில் கூட்டு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 1
பாசிபருப்பு – கால்கப்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
வெங்காயம் – 2
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் – அரைக்கப்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 6 பல்
சீரகம் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய், கடுகு, வெங்காயம் , கறிவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் நருக்கிய வாழைத்தண்டு சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதன்பிறகு வாழைத்தண்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். அதன்பிறகு தேங்காயுடன் பச்சை மிளகாய் பூண்டு சீரகம் ஆகியவறை ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அதில் தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறி விடவும். சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.

Related posts

மாங்காய் சாதம்

nathan

தேங்காய் சாதம்

nathan

கேரளா பருப்பு குழம்பு

nathan

தர்பூசணிப் பொரியல் செய்யலாம் வாங்க…..!

nathan

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

லோபியா (காராமணி கறி)

nathan

ஃபிரைடு ரைஸ்

nathan