36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி tamil samayal

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மோர் – 1 கப்
தேங்காய் – சிறிதளவு
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித் து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

Related posts

நீரிழிவு நோயாளிகளுக்கான… பீர்க்கங்காய் பொரியல்

nathan

வெஜிடேபிள் கறி

nathan

பீட்ரூட் தயிர் பச்சடி

nathan

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்பு

nathan

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

nathan

தேங்காய் பால் பிரியாணி

nathan

சேனைக்கிழங்கு சாப்ஸ்

nathan

காளான் லாலிபாப்

nathan