சைவம்

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 200 கிராம் (வேக வைத்துக் கொள்ளவும்)
மிளகு – 2 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – அரைதேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

* வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

* வடித்துவைத்துள்ள சாதத்தில் அரைத்தபொடி, உப்பை சேர்க்கவும்.

* தாளிக்கவேண்டிய பொருட்களை தாளித்து கொட்டி, கிளறவும்.

* வயிற்று கோளாறுகளை அகற்றி உணவு நன்கு ஜீரணிக்க உதவும். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு. சளி, இருமல், தலையில் நீர் ஏற்றத்தால் உண்டாகும் தலைவலி போன்றவைகள் நீங்கும்.milagu annam

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button