31.2 C
Chennai
Saturday, May 17, 2025
21 60fcb21fa55c8
அழகு குறிப்புகள்

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்த பொலிஸ் அதிகாரி! தங்க கழிப்பறை… தங்க படிக்கட்டு!

ரஷ்யாவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய கோடீஸ்வரர் ஆனம் சம்பவம் அம்பலமாகியுள்ளதால், அது நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் போக்குவரத்துக் காவல்துறையில் மூத்த அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ்வின் ஆடம்பர மாளிக்கைக்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தியுள்ளனர்.

 

அப்போது, அங்கு கழிவறை மற்றும் சில பொருட்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அனுமதி பெறாத சரக்குகளை சோதனைச் சாவடிகள் வழியாக கொண்டு செல்வதற்கு ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவலர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாக வந்தப் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இவர்கள் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 1.9 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளனர். சோதனை நடந்த அதிகாரியின் மாளிகைக்குள் படிக்கட்டுகள், அலமாரிகள், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்களில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்பு துறையினர் வீடியோவாக எடுத்துள்ளனர்.

 

அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கைது செய்யப்பட்ட அதிகாரி இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

 

21 60fcb21fc780d

Related posts

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

வீட்டை விட்டு வெளியேறிய ஆலியா பட்…!!! திருமணம் முடிந்த பிறகு…

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

Tamil Beauty Tips ,அழகுக் குறிப்புகள்,தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா

nathan

சூப்பர் டிப்ஸ்…முகத்தில் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வழிகள்!!

nathan

டிடியின் முன்னால் கணவராக இது? நீங்களே பாருங்க.!

nathan