28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1504073
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…கொட்டை உள்ள திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

திராட்சை பழத்தில் கொட்டை உள்ள திராட்சை மற்றும் கொட்டை இல்லாத திராட்சை பழங்கள் உள்ளது. இவைகள் இரண்டும் உடலுக்கு நல்ல சக்தியை வழங்கக்கூடியது.

அளவோடு சாப்பிடும் வந்தால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அதிகளவு சாப்பிடும் பட்சத்தில், அமிலத்தன்மை காரணமாக வயிற்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

உண்மையில் திராட்சை பழத்தில் பல விதமான திராட்சை பழங்கள் உள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் திராச்சை, பச்சை நிறத்தில் இருக்கும் திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை, ஆங்குர் திராட்சை என்று பல விதமான திராட்சைகள் இருக்கிறது.

 

திராட்சையில் விட்டமின்கள் ஏ, சி, பி6, கே ஆகியவையும், தாதுஉப்புகளான பொட்டாசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், செலீனியம் ஆகியவையும், ஃப்ளவனாய்டுகள், நார்சத்துகள் ஆகியவையும் காணப்படுகின்றன.

திராட்சையில் காணப்படும் பாலிஃபீனால்கள் இதய நோய் வராமல் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இவை இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு இதயத்தையும் சரிவர செயல்பட செய்கின்றன.

இப்பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. திராட்சை பழத்தில் இருக்கும் சர்க்கரை சத்துக்கள், கார்போஹைட்ரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசிய சத்துக்களின் காரணமாக நமது உடல் நலமானது மேம்படுகிறது.

கொட்டை இருக்கும் கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

Related posts

மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்

nathan

தெரிஞ்சிக்கங்க…உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

nathan

மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan

நாவல் பழத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வராது!

nathan

தினமும் இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

nathan

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

nathan

கோவைக்காய்! முள் வேலியில் வளர்ந்து கிடப்பதில் இவ்ளோ பவரா?

nathan

முயன்று பாருங்கள்…சத்து மாவு

nathan