ஆரோக்கிய உணவு

சுவையான கொத்தமல்லி துவையல்

பெரும்பாலானோர் வீடுகளில் காலை வேளையில் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்கும். இப்படி உங்கள் வீட்டிலும் காலையில் இட்லி, தோசை செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த கொத்தமல்லி துவையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Coriander Leaves Thogayal
தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி – 1 கட்டு (சுத்தம் செய்தது)
புளி – 1 சிறு துண்டு
கடலைப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னறிமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

பின்பு அதில் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால், கொத்தமல்லி துவையல் ரெடி!!!

Related posts

காரட் ஜூஸ் இவ்வளவு நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்!அப்ப இத படிங்க!

nathan

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! இத படிங்க!

nathan

உங்க இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு நிற பழங்கள்..இவ்வளவு நன்மைகளா?

nathan

மாதுளையின் நன்மைகள்

nathan