30.5 C
Chennai
Sunday, Jun 30, 2024
whenwereallyneedtodocaesarean
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போது சிசேரியன் அவசியம்?

பிரசவத்தின் போது சில மருத்துவ நிலை அல்லது சிரமங்கள் ஏற்படும் வகையில், வலுவான காரணம் இருந்தால் மட்டுமே சிசெரியம் அவசியம்.

ஆனால், நாம் பிரசவலி வந்தாலே பயந்து சிசேரியன் செய்ய ஒப்புதல் கூறிவிடுகிறோம். சிசேரியன் செய்தால் லாபம் என்பதால் பல தனியார் மருத்துவமனைகளும் சிசேரியன் செய்ய வைக்க தான் முயற்சி செய்கின்றனர்.

உண்மையில் எந்தெந்த நிலைகள் நேர்ந்தால், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறித்து குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தம்பதிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பணம் போனால் போகட்டும் என நினைப்பவர்கள், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் தான் பிரசவத்திற்கு பிறகு அதிக வலி மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

காரணம் #1

பிரசவ வலி தாமதம் ஆவது, பிரசவத்திற்கு குறித்த நேரம் வரை பிரசவ வலியே இல்லாமல் இருப்பது.

காரணம் #2

குழந்தையின் இதயத்துடிப்பு குறைய துவங்குவது அல்லது குறைந்து காணப்பட்டால்.

காரணம் #3

தொப்புள்கொடி குழந்தையை சுற்றி இருந்தாலோ, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டரியப்பட்டாலோ.

காரணம் #4

குழந்தை இயல்பான எடைக்கு அதிகமாக இருந்தாலோ, உருவத்தில் பெரிதாக இருந்தாலோ.

காரணம் #5

தாயின் கருவறையில், குழந்தை சிக்கலான நிலையில் இருந்தால்.

காரணம் #6

இரட்டை குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேலான எண்ணிக்கையில் இருந்தால்.

காரணம் #7

தாய்க்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால்.

காரணம் #8

கர்ப்பப்பை வெடிப்பு / பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால்.

Related posts

புகைப்பழக்கத்திற்கு அடிமையா….?

nathan

உங்களுக்கு தெரியுமா பல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி!!

nathan

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

nathan

முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்களை வலிமைப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பை மற்றும் எடையை வேகமாக குறைக்க இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க…

nathan

மலச்சிக்கல், மாதவிடாய்க்கோளாறு நீக்கும், தாம்பத்ய உறவை பலப்படுத்தும் கற்றாழை!⁠⁠

nathan

பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம்

nathan

காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க! சூப்பர் டிப்ஸ்

nathan