26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 uppu seedai
சிற்றுண்டி வகைகள்

சுவையான உப்பு சீடை

உங்களுக்கு சீடை ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக உப்பு சீடையின் எளிய செய்முறையைக் கொடுத்துள்ளது. இந்த உப்பு சீடை செய்வதற்கு வேண்டிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு அலையத் தேவையில்லை. வீட்டிலேயே இருக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டே செய்யலாம்.

சரி, இப்போது அந்த உப்பு சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
உளுத்தம் பருப்பு பொடி – 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன் (வறுத்தது)
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவிற்கு…

முதலில் பச்சரியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, பின் ஒரு மென்மையான காட்டன் துணியில் பரப்பி உலர வைக்க வேண்டும். அரிசியானது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

உளுத்தம் பருப்பு மாவிற்கு…

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

சீடை மாவிற்கு…

ஒரு பௌலில் மேலே குறிப்பிட்ட அளவுள்ள அரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பு மாவை போட்டு, அத்துடன் எள், துருவிய தேங்காய், சீரகப் பொடி, மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்து, 1/2 மணிநேரம் உலர வைக்க வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், உப்பு சீடை ரெடி!!!

Related posts

பாசிப்பருப்பு கடையல்

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

இடியாப்பம் சௌமீன்

nathan

சோளா பூரி

nathan

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி

nathan

சுவையான மசால் தோசை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

உருளைக்கிழங்கு சமோசா

nathan