29.1 C
Chennai
Monday, May 12, 2025
095f5390b3
Other News

தெரிஞ்சிக்கங்க…பனங்கிழங்குவுடன் மிளகை உட்கொண்டால் ஏற்படும் அதிசயம் என்ன?

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த காலத்தில் கிராமங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். மேலும், உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும். பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.

Related posts

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட வனிதா

nathan

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏ.ஆர். ரஹ்மான்!

nathan

விஜே மகேஸ்வரியின் 38-வது பிறந்தநாள்.!

nathan

10,000 டாலர் பரிசுடன் ‘WORLD’S TOP CODER’ ஆன ஐஐடி மாணவர்!

nathan

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

நம்ப முடியலையே…உடல் எடை குறைக்க ப டாத பாடு ப டும் சொப்பன சுந்தரி நடிகை.!

nathan

குஜராத்தில் பிரபலமாகி வரும் விமான உணவகம்

nathan

பிக்பாஸ் மாயாகிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..??

nathan

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள்.. லியோ ஷாக்கிங் சென்சார் ரிப்போர்ட்

nathan