28.9 C
Chennai
Monday, May 20, 2024
1562669285 5584
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான மக்ரோனி ரெசிபி

நூடுல்ஸ் போன்றது தான் மக்ரோனி. இந்த மக்ரோனியானது பல வடிவங்களில் உள்ளது. இதனை எப்படி செய்வதென்று பலருக்கு தெரியாது. ஆனால் மக்ரோனி செய்வது மிகவும் ஈஸியானது. குறிப்பாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற ஒரு காலை உணவும் கூட.

இங்கு அந்த மக்ரோனி ரெசிபியின் ஒரு சிம்பிளான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி – 2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்

செய்முறை:

முதலில் ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், மக்ரோனி ரெடி!!!

குறிப்பு:

1 டம்ளர் மக்ரோனிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் விட வேண்டும். அதேப் போல் குக்கரை மூடும் முன், மக்ரோனிக்கு மேல் தண்ணீர் உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

காண்ட்வி

nathan

பனீர் கோஃப்தா

nathan

பண்டிகை காலத்தில் கண்டிப்பாக இடம்பெறும் வடை, பாயசம்…

nathan

விருதுநகர் புரோட்டா

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

ஜவ்வரிசி தோசை

nathan

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan