28.6 C
Chennai
Monday, May 20, 2024
sl3906
சிற்றுண்டி வகைகள்

அடைக் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 2 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
கருப்பு உளுத்தம்பருப்பு – 1/2 கப்,
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4,
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டேபிள்
ஸ்பூன், கறிவேப்பிலை – தேவைக்கு,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளையும், காய்ந்த மிளகாயையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியையும் பருப்பையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரகரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் பெருங்காயத்தை சேர்க்கவும்.

இந்த மாவை கடாயில் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து உருட்டும் பதம் வரும் வரையில் கிளறவும். அடுப்பிலிருந்து எடுத்து ஆறியபின் கைகளை ஈரமாக்கிக் கொண்டு சின்ன கொழுக்கட்டைகளாக செய்யவும். இட்லி குக்கரில் கொழுக்கட்டைகளை வைத்து 20-25 நிமிடங்கள் வேக விடவும். சூடான அடைக் கொழுக்கட்டைகள் தயார். சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.sl3906

Related posts

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

அவல் உசிலி

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

கம்பு தோசை..

nathan

குருணை கோதுமைக் களி

nathan

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan