26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
03 spinach potato and brinjal c
ஆரோக்கிய உணவு

சுவையான பசலைக்கீரை உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் வறுவல்

காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக நோய்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். அதிலும் கீரைகளை சேர்த்து வந்தால், உடல் வலிமையுடன் இருக்கும். இங்கு கீரைகளில் ஒன்றான பசலைக்கீரையை, உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயுடன் சேர்த்து எப்படி வறுவல் செய்வதென்று கொடுத்துள்ளோம்.

மேலும் இது மிகவும் ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த பசலைக்கீரை உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் வறுவலின் செய்முறையைப் பார்ப்போம்.

Spinach Potato and Brinjal Curry
தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை – 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

கத்திரிக்காய் – 2-3 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து நறுக்கியது)

வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2-3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை மற்றும் பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பசலைக்கீரை உருளைக்கிழங்கு கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!

Related posts

கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

nathan

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பை அடக்கும் உணவு பொருள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

கேரட் ஜீஸ் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

பக்க விளைவு அறவே இல்லை… தமிழர்கள் மறந்து போன அதிசக்தி வாய்ந்த கருப்பு உணவு பொருள்!

nathan

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

சூப்பர் டிப்ஸ் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

nathan