மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.தெரிந்துகொள்வோமா?

பிரேக்-அப். இளையோர்கள் மத்தியில் சர்வசாதரணமாக புழங்கும் இந்த வார்த்தையில் தான் எத்தனைச் சிக்கல்கள் பிரேக்-அப் செய்திட்டு பிறகு வருந்துவதை விட காதலில் இருந்து கொண்டு இந்த காதல் நமக்கு தேறுமா என்று தவிக்கும் காதலர்கள் தான் இன்று அதிகம். இந்த அறிகுறிகள் உங்கள் இருவருக்கிடையே இருந்தால் தாராளமாக பிரேக்-அப் செய்யலாம். எந்த மாதிரியான சூழல்களில் பிரேக் அப் நிகழும் என்று சில யோசனைகள்
re1
உரையாடல் :
புரிதலின் ஆணிவேரே உரையாடல் தான். அதற்காக நேரம் செலவழிக்க விருப்பமில்லை என்றால் காதலில் விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். உரையாடல் தொய்விற்க்கான காரணத்தை விளக்கி நிலையை எடுத்துச் சொல்லி புரியவைப்பதோ,காத்திருக்கச் சொல்லி நேரம் கேட்பதோ உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால் இதனை தொடர்ந்து நீட்டிக்காமல் உடனடியாக தீர்வு காண்பது தான் நல்லது. இறுதி வரை தீர்வே கிடைக்காதபட்சத்தில் பிரேக் அப் தான் தீர்வு.
re2
பொய் :
ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் பூரணமாக நம்ப வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கை உங்கள் இணைக்கு குறைய ஆரம்பித்துவிட்டது என்றாலே அந்த உறவு நீடிக்காது சமாளிக்கிறேன் என்று பொய்சொல்லி உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். பொய்கள் தொடர்ந்தால் நிச்சய்ம் பிரேக் அப்.
re3
தவிர்ப்பவர்களை தவிர்த்தல் நலம் :
பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது, கால்,மெசேஜ்களை தொடர்ந்து தவிர்ப்பது போன்றவை உங்கள் மீதான மதிப்பை இழக்கச் செய்திடும். சூழலை விளக்கி உண்மையை புரியச் செய்யுங்கள். உங்கள் மீது மதிப்பு இல்லாத போது காதல் குறைந்திடும். மிகப்பெரிய மனக்கசப்பை தரும் சண்டையாய் உருவாவதற்கு முன்னாலேயே பிரச்சனையை தீர்த்திடுங்கள் இல்லையென்றால அந்த ரிலேஷன்ஷிப்பிலிருந்து வெளியேறிடுங்கள்.
re5
முற்றுப்பெறாத சண்டைகள்:
காதலில் சண்டைகள் வருவது சகஜம் தான். சண்டையிட்டு பிரிந்து ஒருவரின் பிரிவை இன்னொருவர் உணர்ந்து அதே தவிப்புடன் சேர்கையில் கூடும் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காலம் நீண்டு கொண்டேயிருந்தால் காதல் குறைய ஆரம்பித்துவிடும். சண்டையிட்டால் தான் என் காதல் ஸ்ட்ராங்காக இருக்கும் என்று நம்பாதவர்களின் காதல் தான் நீடித்து நிலைக்கும்.
re7
மரியாதை :
உங்களது இணை முழுக்க முழுக்க உங்களுக்கு உரிமையானவர்கள் தான். அவர் உங்கள் மீதும், நீங்கள் அவர் மீதும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள் தான் ஆனால் அதற்காக எப்போதும் அவர்க்ளுக்கான மரியதையை விட்டுக் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். மரியாதைக் குறைவாகவே இருக்கும் பட்சத்தில் அது உரையாடலின் போது வெளிப்படும்.தொடர்ந்து வெளிப்படும் மரியாதைக் குறைவான வார்த்தைகள் இணை எனக்கு முக்கியமல்ல என்பதை உங்களுக்குள் விதைக்கும் இணையை நம்பச் செய்யும்.
re4
தடை விதிக்காதீர்கள் :
எப்போதும் உங்கள் இணையை அன்புடன் அணுகுங்கள், மரியாதையுடன் நடத்துங்கள், விருப்பங்களுக்கு செவிமடுங்கள். காதலை கட்டுப்படுத்தும் ஸ்பீட் பிரேக்கராக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். காதலை கேடயமாக பயன்படுத்தி இணையை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் உங்கள் காதல் ஸ்பீட் பிரேக்கரை கடந்து பிரேக் அப் நோக்கி நகர்ந்திடும்.
re8
சுயநலம் :
என் இணை எனக்காக ஒரு ஜீவன் என்கிற எண்ணம் தான் காதலின் அடித்தளமாய் இருந்து இயக்குகிறது. அதனையே கலைக்கும் விதமாக உங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் பிரேக் அப்க்கு க்ரீன் சிக்னல் தான்.
re9
நேரம் :
உங்களுக்கான அழகான நிமிடங்களை உருவாக்குங்கள், நினைவில் நிற்கும் தருணங்கள் தான் உங்களது இருப்பை உணர்த்தக்கூடியது. அதையே உருவாக்காமல் காதலித்து பயனேதுமில்ல. சில தருணங்களை பகிர வேண்டும் என்றும் அந்நேரத்திற்கான ஆதரவு குரலாக நீங்கள் இருக்க வேண்டும் என்ற அவர்களது ஏக்கத்தை கையாளத்தெரியவில்லை அல்லது அதை அணுக முடியவில்லை என்றால் இணையை நோகடிக்காமல் விலகுவது நன்று.
re10
ஏமாற்றம் :
அன்பும் அளவுகடந்த நம்பிக்கையும் சேர்ந்தது தான் காதல். அந்த நம்பிக்கையை சிதைக்கும் படியாக நடந்து கொண்டாலோ அல்லது அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நீங்கள் சிக்கினாலோ உங்கள் இணையிடம் தராளமாக பிரேக் அப் சொல்லலாம்.
re6
காரணங்களை தேடாதீர்கள் :
காரணம் தெரியாமல் இருப்பது சுவாரஸ்யமாக இருக்கும். சுவராஸ்யம் இருக்கும் வரை அதிலொரு ஈர்ப்பு இருக்கும் அந்த ஈர்ப்பு காதலுக்கு மிக அவசியம். காதலை ஏற்பதற்கு காதலை தொடர்வதற்கு என்று குறிப்பிட்ட காரணங்களை வகுத்துக் கொள்ளாதீர்கள் இணையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த நேரத்திலிருந்து உங்கள் பிரிவிற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்பதை உணருங்கள்.
re11
அட்ஜஸ்ட்மெண்ட் :
சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது, பொறுத்துப்போது,கண்டுகொள்ளாமல், பெரிது படுத்தாமல் இருப்பது எல்லாம் உறவு நீடிக்க முக்கியம். இதுவே தொடர்ந்தாலோ அல்லது இப்படி தொடர உங்களுக்கு விருப்பமில்லை என்றாலோ தயக்கமின்றி பிரேக் அப் சொல்லுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button