26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900.1
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா? இந்த இயற்கை பொருட்களை தினமும் தடவுங்க…

குதிகால் வெடிப்பு எல்லா பெண்களுக்கு சாதாரணமாக தோன்றுவது தான்.

குதிகால் வெடிப்பு வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும்.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை செய்தாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை

கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவும்.

அதன் பின்னர் உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்

அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும்.

இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள்

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும்.

அரிசி மாவு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

பின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

இதன் பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில்

1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து கொள்ள வேண்டும்.

பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

துளசி மற்றும் மஞ்சள் தூள்

துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து கொள்ளவும்.

பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.

Related posts

வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….

sangika

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan

முடி 5 மடங்கு வேகமாக வளரனுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குட்டித் தூக்கம் போடுறவரா நீங்க? போச்சு! போச்சு!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசியின் செக்ஸியான விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கனுமா?

nathan

விரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்

nathan

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழிமுறை

nathan