32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
முகப் பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

முகத்தை சுத்தப்படுத்துவதில் முகம் கழுவும் விதமும் மிகவும் முக்கியமானது. ஆனால் பலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோவென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். இப்படி கவுவதால் சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சில பெண்களுக்கு ஃபேஷ் வாஷ் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் பின்பற்றக்கூடாதவைகள் பற்றி தெரியவில்லை. அதனால் பெண்கள் பல சரும பிரச்சனைகளை சந்தித்து, சருமத்தின் அழகையே கெடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் சில ஆண்களுக்கும் பொருந்தும், அவர்களும் பின்பற்றலாம்.

மைல்டு ஃபேஷ் வாஷ்

எப்போதுமே சருமத்திற்கு ஏற்றவாறான ஃபேஷ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் எப்போதுமே சிறந்தது.

மிதமான தண்ணீர்

முகத்தைக் கழுவும் போது, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியுடனோ இருக்கும் நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே மிதமான நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தியே முகத்தைக் கழுவ வேண்டும்.

2-3 முறை ஃபேஷ் வாஷ்

குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

மென்மையாக கழுவவும்

முகத்தில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. மேலும் கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

ஃபேஷ் வாஷை மேக்கப் ரிமூவராக வேண்டாம்

மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிலர் கிளின்சர், டோனர், மாய்ஸ்சுரைசர் போன்ற செயல்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த செயல்கள் அலர்ஜியைக் கூட ஏற்படுத்தலாம். ஆகவே சிம்பிளாக மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்தி முகத்தைக் கழுவினாலே போதுமானது.

தயிர் அல்லது பால் சிலருக்கு கெமிக்கல் பொருட்கள் பிடிக்காது. அத்தகையவர்கள் தயிர் அல்லது பால் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். அதற்கு தயிர் அல்லது பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த செயலுக்கு பின் சோப்பை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சோப்பு தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்.

Related posts

மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க உடலில் கருப்பு மற்றும் சிகப்பு புள்ளிகள் ஏற்படாமல் இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! கரும்புள்ளிகளைப்போக்கி முகத்தை பொலிவாக்க‍ சில குறிப்புகள்

nathan

இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.

nathan

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் fruit facial tips in

nathan

முகத்தில் வரும் சீழ் நிறைந்த முகப்பருக்களை போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

nathan