முகப் பராமரிப்பு

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் fruit facial tips in

நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.

சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்களை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம்.

அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்விரண்டிலும் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் சுருக்கங்களை போக்கும். மென்மையாக சருமத்தை வைத்திடும். இதை வாரம் 3 முறை செய்யலாம்.

வாழைப்பழம், யோகார்ட், தேன் இந்த மூன்றுமே சருமத்தில் அழகினை கொண்டு வந்து சேர்க்கும் கலையை பெற்றிருக்கின்றன. மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். குழந்தையின் சருமத்தை போன்றே மென்மையாக அப்போதே உணர்வீர்கள்.

வாழைப்பழம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் தூண்டும். இவை சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மென்மையாக்கிவிடுகிறது. சருமம் பூசியது போல் காண்பிக்கும்.

பப்பாளிப்பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் ஃபைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இது சருமத்தின் பாதிப்புகளை சரிபடுத்துகிறது. முதுமை அடைவதை தள்ளிப்போடச் செய்யும். பப்பாளிப்பழத்தின் சதைப்பகுதியை மசித்து, சருமத்தில் போட்டு சிறிது நேரம் மசாஸ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். மிக மென்மையான சருமத்தை பெறுவீர்கள்.201606250741056795 Softens skin fruits SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button