30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

பால் – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
பார்லித்தூள் – 1 டீஸ்பூன்

ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண்களை சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண்மை பொலிவுடனும் மற்றும் முகம் பளபளப்புடனும் இருக்கும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

Related posts

சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா? உஷார்!

nathan

மூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

உங்கள் புருவத்தின் தோற்றத்தை எப்படி திருத்திக் கொள்ளலாம்?

nathan

முகப்பருக்களை வராமல் தடுப்பது எப்படி?

nathan

கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்

nathan

ஜப்பானியர்கள் இவ்வளவு மொழு மொழுனு இருக்க என்ன காரணம்னு தெரியுமா…? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற

nathan