25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
drinking water
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுடைய குழந்தைகள் பரீட்சை நல்லா எழுதணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

பரீட்சையின் போது ஒரு குழந்தை எந்த விதமான உணவை சாப்பிட வேண்டும் என்று யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், ஆரோக்கியமான உணவை எப்பொழுதும் சாப்பிட்டு வரும் குழந்தைகளும் கூட, தேவையற்ற ஜங்க் உணவுப் பொருட்களை பரீட்சை நேரங்களில் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவும் குழந்தைகள் நீண்ட நேரம் விழித்திருந்து படிக்கும் நோக்கத்தில் இந்த தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள்.

எனவே, உங்களுடைய குழந்தைகள் பரீட்சை நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இது போன்று முயற்சி செய்யப்பட்ட 10 உணவுக் கட்டுப்பாடுகளைப் பற்றி இங்கு கொடுத்துள்ளோம்.

நிறைவான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு

ஓட்ஸ், உப்புமா, கிச்சடி, இட்லி ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்வதால் குறைந்த அளவே கிளைசீமிக் குறியீடு இருப்பதுடன், குளுக்கோஸும் தொடர்ந்து கிடைக்கும்.

அடிக்கடி சாப்பிடுங்க – ஆனால் குறைவாக!

குறைவான அளவில், அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் நீண்ட நேரம் ஊக்கத்துடன் விழித்திருந்து படிக்க முடியும். இதற்காக பழங்கள், உலர் பழங்கள், தேன் தடவிய நட்ஸ், சாலட்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

புரோட்டின் உணவு

உணவில் சேர்த்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட்கள் வேகமாக செரித்திடும் நேரத்தில், அதே உணவில் உள்ள புரோட்டின் நிதானமாக செரிமாணம் ஆவதால் உடலுக்குத் தேவையான சக்தி நீண்ட நேரம் கிடைக்கிறது. புரோட்டின் அதிகளவு நிரம்பியுள்ள காலை சிற்றுண்டியில் (முட்டை, போஹா, இட்லி, தோசை போன்றவை) டைரோசின் என்ற அமினோ அமிலங்களின் அளவை இரத்தத்தில் அதிகரிப்பதால், மூளைக்கு செல்லும் நரம்பு செல்களில் உற்பத்தியாகும் வேதிப்பொருட்கள் குழந்தைகளை விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

நீராகாரம்

ஏசி அறையில் மிகவும் வசதியாக அமர்ந்திருக்கும் குழந்தைகள் தாகத்தை அதிகம் உணர மாட்டார்கள். இதன் காரணமாக மிகவும் குறைவான அளவே தண்ணீர் குடிப்பார்கள். எனவே, இவர்களுடைய உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, உடலும், மனமும் சோர்வடைந்து விடுவதால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே, குழந்தைகள் அதிகமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அவர்களுக்கு பழச்சாறுகள், சாஸ், மோர் அல்லது எலுமிச்சை சாறு அல்லது கிரீன் டீ போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

காப்ஃபைனை கைவிடுங்கள்

பரீட்சை நேரத்தில் மிகவும் அதிகமாக காபி, சக்தி பானங்கள், தேநீர் மற்றும் கோலா போன்றவற்றை குடிப்பதால் குழந்தைகளுயை சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் முறையான அல்லது சரியான தூக்கத்தை தூங்க முடிவதில்லை.

வேண்டாமே – அதிகமான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு

சாக்லேட், குக்கீஸ் போன்றவை திடீரென இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தி விடும். சிறிது நேரத்திற்குப் பின்னர், உங்களுடைய வயிறு காலியாகும் போது குழந்தைகள் தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட உந்தப்படுவார்கள்.

மன அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்

ஆண்டுத் தேர்வு போன்ற மன அழுத்தம் தரும் பரீட்சை நேரங்களில், தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி போன்றவை மற்றும் துத்தநாக தாதுக்கள் போன்றவைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும். இவை அட்ரீனல் ஹார்மோன்களின் சேர்க்கைக்கும், செயல்பாட்டுக்கும் உதவுவதால் மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். எனவே, குழந்தைகள் சாப்பிடும் உணவில் பழுப்பு அரிசி, நட்ஸ், முட்டை, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொடுங்கள்.

மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் உணவுகள்

ப்ரீ ராடிக்கல்ஸ் எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட வைட்டமின்களான வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ ஆகிய ஆக்சிஜன் எதிர்பொருட்கள் மூளை செல்கள் பாதிக்கப்படுவதை குறைக்கின்றன. முட்டை, மீன், கேரட், தர்பூசணி, பசுந்தழைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் இந்த தேவைகளை தீர்த்திட முடியும். மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பரீட்டை நேரத்தில் உங்களுடைய குழந்தை நோய்வாய்ப்படுவதை தவிர்க்கின்றன.

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் அதிகரிக்கும் குணத்தைக் கொண்டுள்ளது. ஒரு வாரத்திற்கு 2 சால்மன் மீன்களை குறைந்தபட்சம் குழந்தைகள் சாப்பிட வேண்டும். அவர்கள் மீன் சாப்பிடாதவர்களாகவோ அல்லது மீன் கிடைக்கா நிலை ஏற்பட்டாலோ, அல்சி, தர்பூசணி விதைகள், சோயா பீன்ஸ் எண்ணைய் போன்றவற்றை உங்களுடைய உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வேறு மாற்றுப் பொருட்களாலும் பெற முடியும்.

வெளி உணவுகளை தவிர்த்தல்

இறுதியானதும் முக்கியமானதுமான அறிவுரையாக இருப்பது வெளியிட உணவுகளை தவிர்ப்பதாகும். ஏனெனில், அதிகளவு மன அழுத்தமும், குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரே சமயத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நேரம் பரீட்சை நேரமாகும். எனவே, வெளியில் சென்று குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்த்திடவும். உங்களுடைய குழந்தை கண்டிப்பாக வெளியில் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், ஏற்கனவே சாப்பிட்டு பின்விளைவுகள் பாதகமாக இருக்காத உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்.

அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பரீட்சை எழுதி, மதிப்பெண்கள் பெற தமிழ் போல்ட் ஸ்கை வாழ்த்துகிறது.

Related posts

நம்ப முடியலையே…குணத்தில் இந்த ராசிகாரர்களை அடிச்சுக்க ஆளே இல்ல தெரியுமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஈஸியா ஏமாந்துறுவாங்களாம்…

nathan

4ம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

உங்க உணவில் இந்த விஷயங்கள் அதிகமாக இருந்தால் உங்கள் கிட்னி அவ்வளவுதானாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

கர்ப்ப காலத்தில் வரும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்க இயற்கை வழிகள்

nathan

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!

nathan

உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் குழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்!…

nathan