24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
asonsaftermarriage
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்

நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளங்குவது திருமணம். நம் ஒவ்வொருவரின் கனவுகளில் ஒன்று தன திருமணம். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது. திருமணம் என்றாலே ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பெண்களில் வாழ்க்கையில், அதுவும் நம் நாட்டில். சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை அள்ளிக் கொடுப்பது தான் திருமணம்.

ஏற்கனவே சொன்னதை போல, பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வரும். புதிதாக திருமணமான ஒரு பெண்ணின் மனதில் பல எண்ணங்கள் ஓடும். திருமண திட்டங்கள் தொடர்பான பல்வேறு எண்ணங்கள் ஒரு பெண்ணிற்கு அழுத்தம் கலந்த குதூகலத்தை அளிக்கும். அது முடிந்த பிறகு அடுத்த கட்ட எண்ணங்கள் அவளின் மனதில் ஓடத் தோன்றும். திருமணத்திற்கு முன்பு தன் மனதில் தோன்றியதை போல, இந்த எண்ணங்களும் அவளின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும். அவளின் மனது குழப்பம், குதூகலம், சந்தோஷம், நடுக்கம் மற்றும் இன்னும் பல உணர்ச்சிகளை சந்திக்கும்.நீங்கள் சீக்கிரமே தாலியை சுமக்க போகும் பெண்ணா? அப்படியானால் திருமணம் முடிந்த கையோடு உங்கள் மனதில் எழும் பல விஷயங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

#1. சரியான நேரத்தில் தான் எழுந்துள்ளேனா?

படுக்கையில் இருந்து எழுந்த உடனேயே உங்கள் மனதில் எழும் முதல் எண்ணம் இதுவாக தான் இருக்கும் – “நான் தாமதமாக எழுந்திருக்கவில்லை என நம்புகிறேன்.”. காலையில் தாமதமாக எழுந்து உங்கள் மாமனார் மாமியாரிடம் கண்டிப்பாக கெட்ட பெயரை வாங்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால் நீங்கள் தான் கடைசியாக எழுந்துள்ளீர்கள் என்ற எண்ணமே உங்களை சில நிமிடங்களுக்கு நடுங்க வைத்து விடும். அதே போல் அதற்கு பின் என்ன செய்வது என்பது தெரியாமல் குழம்பி போவீர்கள்.

#2. நான் சரியான முடிவை தான் எடுத்துள்ளேன் என நினைக்கிறேன்

இப்போது நீங்கள் அவரை திருமணம் செய்து விட்டீர்கள். இது நீங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த ஒன்றாக இருக்கும். இருப்பினும் நீங்கள் மனதில் நினைத்ததை போல் உங்களுக்கு சரியான ஜோடி தானா உங்கள் கணவர் என்பதை இந்நேரத்தில் நீங்கள் நினைப்பீர்கள். அதனால் இந்த தற்காலிக தாக்கத்தை கையாள தயாராக இருங்கள்.

#3. எல்லாம் வேகமாக நடந்து விட்டது

“அட கடவுளே! எனக்க்கு திருமணம் நடந்து விட்டது! கடைசி ஆறு மாதம் ஒரு நொடிக்குள் பறந்து விட்டது. என் திருமணத்திற்கு நேற்று தான் திட்டமிட்டதை போல் இருந்தது. என் பெற்றோர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என நம்புகிறேன்.” என நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் கணவருடன் இருக்கும் இந்த நொடியில் இப்படி பழைய சிந்தனைகள் எல்லாம் உங்கள் மனதில் ஓடும்.

#4. நான் என்ன ஆடை அணிய வேண்டும்?

அதிக எடையுடனான ஆடைகளுடன், மேக்-அப் செய்து, நகைகளை அணிய வேண்டியதில்லை என்பதை நினைக்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு நிம்மதியாக தான் இருக்கும். ஆனால் அதே நேரம், புதிய வீட்டில் எந்த மாதிரி ஆடை அணிவது என்ற எண்ணம் உங்களிடம் நிலவும். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு ஆடையை எடுக்கும் போதும் ஏதாவது கேள்விகள் கண்டிப்பாக உங்கள் மனதில் எழும். உதாரணத்திற்கு, ‘புதிதாக திருமணம் ஆனதால் இதை அணிவது சரியாக இருக்குமா?’, ‘நான் ரொம்ப காஷுவலான ஆடைகளை தேர்ந்தெடுக்கிறேனா?’ போன்ற கேள்விகள்.

#5. நீங்கள் நீங்களாக இருக்கலாம்

திருமண வைபவங்கள் முடிந்த பிறகு நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அதற்கு முக்கிய காரணம், பொய்யான புன்னகை, அறிமுகமில்லாதவர்களை வரவேற்றல் போன்றவைகள் கிடையாதல்லவா? நீங்கள் நீங்களாக இருக்கலாம். உங்களை சுற்றி நடப்பதை எண்ணி பதற்றமடைவதை விட்டு விட்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கலாம். களிப்பூட்டும் உணர்வை உங்களுக்கு அளிக்கும்.

#6. என்னை பிடிக்கும் என நம்புகிறேன்

“முதல் நாள் மாமனார் மாமியாரிடம் நல்ல பெயரை எடுப்பேன் என நம்புகிறேன். அவர்களுக்கு என்னை பிடிக்கும் என நினைக்கிறேன். நான் சமைத்த உணவுகள் வர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.”. இப்படியெல்லாம் உங்கள் எண்ணத்தில் ஓடும் தானே!

#7. ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸை மாற்ற வேண்டிய நேரம்

கடந்த சில வாரங்களாக நீங்கள் மிகவும் பிசியாக இருந்திருப்பீர்கள். அதே போல் இன்னும் சில நாட்களுக்கும். ஆனாலும் உங்களுடைய உறவுமுறை

ஸ்டேடஸை ஃபேஸ்புக்கில் மாற்ற நீங்கள் நேரத்தை தேடுவீர்கள். இதை நீங்கள் பெரிதாக நினைக்க மாட்டீர்கள் தான். இருந்தாலும் கூட உங்களின் அருமையான திருமண கோலாகலத்தை உலகத்திற்கு தெரிவிக்கும் ஆசை இருக்க தான் செய்யும்.

#8. தேன் நிலவுக்கு செல்லும் நேரம்

திருமணமான உடனேயே அந்த தம்பதிக்கு இடையே விடுமுறை மனநிலை உண்டாகும். அதற்கு நீங்களும் ஒன்றும் விதிவிலக்கல்ல. மிக அருமையான ஒரு இடத்தில் உங்கள் கணவருடன் தேன் நிலவை கொண்டாட நீங்கள் கற்பனை செய்திருப்பீர்கள். ஆமாம் தானே!

#9. எனக்கு திருமணமாகி விட்டது. உண்மையாக!

உணர்கின்ற நேரம் கடைசியாக வந்து விட்டது. பிஸியான நாட்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு மத்தியில், உங்கள் வாழ்க்கையில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றத்தை உணர முடியாத நிலையில் இருப்பீர்கள். இப்போது கண்டிப்பாக ஒரு முறையாவது இதனை நீங்கள் நினைப்பீர்கள்.

Related posts

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

nathan

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்

nathan

இந்த ராசிக்காரங்க சீக்கிரம் பணக்காரர் ஆயிடுவாங்களாம்…

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க!!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! ஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடும் கேழ்வரகு அவல்….தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை குறைவாக உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி!

nathan

கருமுட்டை என்றால் என்ன ?

nathan

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம்!

nathan