23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
health benefits of lemon
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தொியுமா எலுமிச்சையின் அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று!!

பெரும்பாலான இந்திய உணவுகளில் எலுமிச்சையானது உணவின் சுவையை அதிகரிக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் எலுமிச்சையை ஜூஸ் செய்து அருந்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி எலுமிச்சை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஏனெனில் எலுமிச்சையில் ஃப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. மேலும் எலுமிச்சையானது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியதும் கூட.

இப்போது எலுமிச்சையில் நிறைந்துள்ள அந்த அட்டகாசமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போமா!!!

எடை குறைவு

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

காய்ச்சல்

எலுமிச்சையானது உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனை குடித்து வந்தாலோ அல்லது எலுமிச்சை துண்டை அவ்வப்போது வெறும் வாயில் தின்று வந்தாலோ, உடலின் வெப்பநிலையானது குறையும்.

உள் இரத்தக்கசிவு

இரத்த நாளங்கள் நன்கு வலிமையாக இருப்பதற்கு வைட்டமின் பி (Vitamin P) என்னும் பயோ ஃப்ளேவோனாய்டு மிகவும் அவசியம். இத்தகையது எலுமிச்சையில் அதிகம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வந்தால், உடலின் உள்ளே ஏற்படும் இரத்தக் கசிவைத் தடுக்கலாம்.

காலரா, மலேரியா

காலரா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து விரைவில் குணமாக எலுமிச்சை ஜூஸ் பெரிதும் உதவியாக உள்ளது. ஏனெனில் எலுமிச்சையானது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள வைரஸ்களை அழித்து வெளியேற்றுகிறது.

வாத நோய்

வாத நோய் மற்றும் நாள்பட்ட மூட்டு வலியால் அவஸ்தைப்படுவர்களுக்கு, எலுமிச்சை நல்ல நிவாரணத்தைத் தரும். ஏனென்றால் எலுமிச்சை ஜூஸை குடிப்பதால், அவை நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம்

எலுமிச்சையில் பொட்டாசியம் இருப்பதால், அவை உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

தொண்டையில் நோய்த்தொற்று

எலுமிச்சைக்கு நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அமிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகளானது நீங்கும்.

பல் பராமரிப்பு

எலுமிச்சையின் மற்றொரு சிறப்பான நன்மை தான் பல் வலியைப் போக்குவது. தினமும் எலுமிச்சையைக் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், அவை ஈறுகளில் வரும் இரத்தக்கசிவைத் தடுக்கும். மேலும் இது வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

சளிக்கு சிறந்த நிவாரணி

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடித்தால், அவை காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றில் இருந்து சிறந்த நிவாரணம் அளிக்கும்.

வயிற்றுப் புழுக்கள்

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த நன்மை தான், வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் எலுமிச்சையை மிஞ்ச வேறு எதுவும் இல்லை.

மூளை பிரச்சனைகள்

எலுமிச்சையின் தோலில் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பைட்டோ நியூட்ரியண்ட் உள்ளது.

பித்த மற்றும் சிறுநீரக கற்கள்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், பித்த கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருந்தால், எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.

குடலியக்கத்திற்கு நல்லது

எலுமிச்சை குடலியக்கத்தை அதிகரிப்பதுடன், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தாலும், எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

கண் பிரச்சனைகளைப் போக்கும்

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் எலுமிச்சையில் ஆரோக்கியமான கண்களுக்கு தேவையான வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது.

புற்றுநோய் செல்களை அழிக்கும்

உங்களுக்கு தெரியுமா, எலுமிச்சையில் 22 புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது. இதனால் எலுமிச்சையை உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால், அவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

Related posts

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

காலையில் அருந்தி பாருங்கள் உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்…

nathan

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு

nathan

கவலை வேண்டாம்! வறட்டு இருமல் நிக்காமல் வருதா?இந்த ஒரே ஒரு பொருள் போதும்

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முட்டைகோஸ் ரொட்டி

nathan

உடல் நலத்தை காக்கும் பனை மரம்!!!

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan