24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
03 channa rice upma
ஆரோக்கிய உணவு

சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா

காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை செய்யுங்கள்.

இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

வரமிளகாய் – 3

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

பிறகு அந்த இட்லியை ஒரு தட்டில் உதிர்த்துவிட்டுக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சீரகப் பொடியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா ரெடி!!!

Related posts

5 month baby food chart in tamil – 5 மாத குழந்தைகளுக்கான உணவு திட்டம்

nathan

பனீர் – பெப்பர் சூப்

nathan

jamun fruit in tamil – ஜாமூன் பழம் (Jamun Fruit)

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

nathan

சூப்பர் டிப்ஸ்! நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவும் வாழைத்தண்டு சூப்

nathan

அழகு.. இளமை.. ஆனந்தம்.. கிரீன் டீ தேயிலை..தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!

nathan

சப்ஜா விதை சாப்பிடும் முறை

nathan