பொதுவாக இரவு தூங்கி காலையில் எழுந்த பின் உள்ளுறுப்புக்கள் திறம்பட செயல்படுவதற்கு சிறிது நேரம் ஆகும்.
ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் இதுக்குறித்து கூறுவதாவது, “ஒருவர் காலையில் எழுந்ததும் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிட ஸ்நாக்ஸ் போன்று ஏதாவது சாப்பிட வேண்டும்.
காலையில் எழுந்த பின் குறைந்தது இரண்டு மணிநேரம் கழித்து தான் காலை உணவை உண்ண வேண்டும்.
ஆகவே நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமானால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த உணவுகளை உண்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே காலை உணவிற்கு முன் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். அதுவும் பாதாமை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.
- ஏனெனில் பாதாமின் தோலில் தான் டானின்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தும்.
- ஆகவே பாதாமை நீரில் ஊற வைத்தால், எளிதில் அதன் தோல் வந்துவிடும்.
- உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ளவும், பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான் சிறந்த வழி.
- தர்பூசணியை காலையில் எழுந்ததும் உட்கொண்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு, இனிப்புக்களின் மீதுள்ள ஆர்வம் தணியும்.
- சியா விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து பருகுங்கள். சியா விதைகளுக்கு வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும் திறன் உள்ளது. இதனால் இது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.
- இந்த விதைகள் நீரில் ஊறும் போது, செரிமான அமைப்பில் விரைவாக செல்வதற்கு ஜெலட்டினஸ் பூச்சு ஒன்றை உருவாக்குகின்றன.