28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.800.90 26
ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான சேமியா தயிர் சாதம் செய்வது எப்படி தெரியுமா?..

பொதுவாக நாம் அனைவரும் வெயில் நாட்களில் நமது உணவில் அதிகமாக தயிர் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

பிரியாணி சாப்பிட்டாலும் கடைசியாக தயிர் சாதத்துடந்தான் தனது மத்திய உணவை முடிப்பான் கிராமத்தான். அப்படிப்பட்ட தயிர் சாதத்தை அரிசியில் மட்டும் அல்லாமல் சோமியாவிலும் சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி பார்போம்..

தேவை பொருட்கள்:
சேமியா – 2 கப்,

வெங்காயம் – ஒன்று

தயிர் -2 கப்,

பால் – ஒரு கப்,பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்), 3

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

முந்திரி – 5

 

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்க்க வேண்டும். அதன் பின் நன்றாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.

சேமியா நன்றாகக் குழைய வெந்தபின் எடுத்து அதனை ஆற வைக்கவும். பிறகு தயிர், பால் சேர்த்து நன்றாகக் கலக்கி, சிறிது நேரம் கழித்துப் பரிமாறினால் சேமியா தயிர் சாதம் ரெடி.

Related posts

எப்போது உணவை அறிமுகப்படுத்த வேண்டும் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு ?

nathan

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

nathan

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?

nathan

நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைக்க எளிமையான வழிகள்!…

nathan

உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, ‘Kenaf fibre’ எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின்கள்..

nathan

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

nathan

கொழுப்பை குறைக்க தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்

nathan

தொப்பையை சீக்கரம் குறைக்கனுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வியர்வையை தடுக்கலாம்

nathan