31.7 C
Chennai
Thursday, May 23, 2024
a8be34af 8a57 4bce aef2 cc7c42fc651d S secvpf
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்

ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர அதற்கான தீர்வு என்ன? எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.

விந்தணு எண்ணிக்கை, இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் நிறைய உடல்நல அபாயங்கள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது.

தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம். சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடதிற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.

இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் பெண்ணுறுப்பில் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது.

சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நெய்லான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Related posts

கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

nathan

சின்ன சின்ன டிப்ஸ் … டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

ஆய்வு கூறும் சிறந்த வழி,, அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?

nathan

இதை படிங்க கோடைகாலத்தில் லெகிங்ஸ் மற்றும் ஜீன்சை தவிர்க்கவும்; காரணம் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் பிரச்சனைகளை தீர்க்கும் கல்யாண முருங்கை

nathan

உஷாரா இருங்க…! இந்த 6 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்…

nathan

ஆன்லைன் கல்வி முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள்

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

நாள்பட்ட நெஞ்சு சளி, மூக்கடைப்பு அனைத்திற்கும் ஒரே தீர்வு!!சூப்பர் டிப்ஸ்!

nathan