27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.80
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வாரம் ஒரு முறை கருணைகிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

நமது நாட்டில் பரவலாக அதிகம் உண்ணப்படும் கிழங்கு வகையான கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.

இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது.

பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

இச்சமயங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது.

மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது. ஊட்டச்சத்து கிழங்கு வகைகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தேவையான சத்துகளை தருவதாக இருக்கிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் சக்தி வாய்ந்த உணவுகள்!!!

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா? புரோட்டீன் அதிகம் உட்கொண்டால்!… உடலில் ஏற்படும் ஆபத்துகள்

nathan

சுவையான சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு!கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த பீட்ரூட் சூப்.

nathan

தேனில் ஊறவைத்து வெங்காயத்தை சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா..?

nathan

கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலரும் கருதுகிறார்கள். நமது உடலின் செயல்முறைகள் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றை தடுப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா? அப்ப இத படிங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா கருஞ்சீரகத்தை இப்படி உட்கொண்டால் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் ..!!

nathan