ஆவாரை குளிர்ச்சித் தன்மையையும், துவர்ப்பு குணங்களையும் உள்ளடக் கியது. ஆவாரை பொன்னாவரை என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா’ என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது ஆவாரைப் பூ இருக்கும் இடத்தின் காற்றுப்பட்டாலே ஆயுள் அதிகரிக் குமாம். சாலைகளிலும் வேலி ஓரங்களிலும் இருக்கும் இதனுடைய அனைத்து பகுதிகளும் சிறந்த பலன்களை அளிக்கவல்லது. ஆவார இலை, வேர், பூ, காய், கிளை, பட்டை, பிசின் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது.
ஆவாரை தலபோடம், ஆவீரை, மேகாரி, ஆவாரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் பழங்காலத்திலிருந்தே ஆவாரை யைப் பயன்படுத்தி பல்வேறு பிணிகள் வராமல் காத்துக்கொண்டார்கள்.
முன் னோர்கள் பொடி நடையாக பயணிக்கும் போது ஆவாரை இலையை பருத்தி துணியில் பரப்பி அந்தத் துணியைத் தலைப்பாகையாக்கி வைத்துக்கொண்டு நடப்பார்கள். இதனால் வெப்பம் உடலில் தோன்றாது என்பதை அன்றே கணித்து வைத்திருந்தார்கள்.
வெள்ளைப்படுதல் குணமாக:
ஆவாரைப் பூவின் இதழ்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி காயவைக்கவும். பிறகு இதை உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் தூளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். தினமும் 2 கிராம் வெண்ணெயில் கால் டீஸ்பூன் இந்தத்தூளை கலந்து குழைத்து சாப்பிட்டால் நாள்பட்ட வெள்ளைப்படுதலும் குணமாகும்.
இரத்தப்போக்கு கட்டுப்பட:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆவாரைப் பட்டை பொடியை வாங்கி அரைலிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியைச் சேர்த்து சுண்டக்காய்ச்சி 50 மி.லி.- யாக்கி காலை மற்றும் இரவு நேரங்களில் குடித்து வந்தால் அதிக இரத்தப் போக்கு கட்டுப்படும். உடல் சோர்வு நீங்கும். ஆவாரை நீரை குடித்து வந்தால் இழந்த இரத்தத்தை ஈடு செய்யலாம்.
கரு தங்க:
ஆவாரை பூ, இதழ், பட்டை ஆகியவற்றை நீரில் இட்டு கொதிக்க வைத்து குடித் தால் கருமுட்டை உற்பத்தி அதிகரிப்பதோடு பெண்கள் விரைவில் தாய்மைப் பேறை அடைவார்கள். கருப்பை குறைபாடுகள் நீங்கும். நோய்கள் அண்டாது.
சிறுநீர் எரிச்சல்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலால் அவதிப்படுபவர்களும் ஆவாரை இதழ் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆவா ரைச் செடியில் இருக்கும் ஆவாரை பிசினை மோருடன் சாப்பிட்டு வந்தாலும் எரிச்சல் குணமாகும்.
சருமம் மின்னும்:
பச்சைப்பயறுடன் ஆவாரம் பூவை உலர்த்தி மிஷினில் அரைத்து மாவாக்கி உடலுக்கு தேய்த்துக் குளித்தால் தேமல், சரும தடிப்பு, சரும நமைச்சல் போன்றவை நீங்குவதோடு சருமமும் மின்னும். இதனுடன் ரோஜா இதழ், கஸ் தூரி மஞ்சள், ஆரஞ்சு எலுமிச்சை தோல் போன்றவற்றையும் சேர்த்து அரைக் கலாம்.
நீரிழிவு நோய் மட்டுப்பட:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆரம்ப காலநிலையில் உள்ளவர்கள் ஆவாரம் பூ அல்லது இதழை தேநீராக்கி குடித்துவந்தால் நாளடைவில் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆவாரை பூவை மோரில் அரைத்து குடிக்கலாம்.
உடல்பலு பெற, இளைத்த உடல் மீண்டு வர, இதய நோய் தீவிரத்திலிருந்து காக்க, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும் ஆவாரை இலை சாதாரணமாகவே வேலி ஓரங்களில் காணப்படுகிறது. பொடியாக தேவையெ னில் நாட்டுமருந்துகடைகளில் கிடைக்கும். ஆவாரையைப் பயன்படுத்தி ஆரோக்யத்தை பலப்படுத்துங்கள்.