28.2 C
Chennai
Monday, Dec 16, 2024
ஆரோக்கிய உணவு

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை
>எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.பலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

சிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து,  நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.

கவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் மருத்துவ மூலிகை ”சீரகம்”! ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் போதும்

nathan

கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ!

nathan

காலைல சீக்கிரமா எழுந்திருச்சீங்கன்னா இவ்வளோ நன்மைகள் இருக்கு தெரியுமா!!!

nathan

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்..!!

nathan

வெறும் 10 நிமிடத்தில் வாழைத்தண்டு சாலட் சாப்பிடனுமா?

nathan

பாதாமில் எத்தனை ஆயுர்வேத நன்மைகள் உள்ளன?

nathan

சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள்!!!

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடலுக்கு அதிக வலுவை கொடுக்கும் கொள்ளு…!!

nathan