தேவையான பொருட்கள்
தயிர் கப் – ஒன்று
சீனி – ஒன்றரை கப்
மைதா – 3 கப்
பேக்கிங் பவுடர் – 15 கிராம்
பட்டர் – 125 கிராம்
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்
ஃபுட் கலர்- 1
முட்டை – 3
கப் கேக் மோல்ட் – பேப்பர்
செய் முறை
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தயிர் கப்பின் அளவையே சீனி மற்றும் மைதாவிற்கு அளவு கப்பாக எடுத்துக் கொள்ளவும்.
தயிர், சீனி, மைதா, முட்டை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒரு பெரிய பவுலில் போட்டு நன்றாக கலக்கவும். அதனுடன் பட்டர் சேர்த்து கலக்கவும்.
ரோஸ் எசன்ஸுடன், புட் கலர் சேர்த்து கரைத்து கலவையில் ஊற்றி, நன்றாக கலக்கவும்.
சிலிகான் கப் கேக் மோல்டினுள் பேப்பர் மோல்டை போட்டு தயாராக வைக்கவும்.
கேக் கலவையை மோல்டினுள் முக்கால் பாகத்திற்கு ஊற்றவும். இதை 165 டிகிரி சூட்டில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
கேக் பாதி வெந்ததும் மேலே டெக்கரேட் கேன்டிஸ் போடலாம். சுவையான கப் கேக் தயார்.