பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகும் ஓர் ஒப்பற்ற மூலிகை மூக்கிரட்டை. மூக்கிரட்டை கீரையை தனியாகவும் மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
நன்மைகள்:
1) மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி தினமும் அருந்தினால் சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
2) மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பை தரக்கூடியது.
3) இதய நோய், ஆஸ்துமா, சைனஸ், சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், வாத கோளாறு, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல நோய்களை தீர்க்கும்.
4) மூக்கிரட்டை இலை பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
5) மூக்கிரட்டை வேரை இடித்து நீர்விட்டு காய்ச்சி சிறிது விளக்கெண்ணெய் கலந்து இரண்டு வேளை குடித்து வர, அலர்ஜி, சருமம் புதுப் பொலிவு பெறும்.
6) மூக்கிரட்டை வேரை இடித்து விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள், வாத நோய்கள் விலகும்.
7) மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், சிறு நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து, அழகு மிளிரும்.