26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 cabbage vada 1653484489
சமையல் குறிப்புகள்

முட்டைக்கோஸ் வடை

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* நறுக்கிய முட்டைக்கோஸ் – 1 கப்

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது

* இஞ்சி – 1/2 இன்ச் துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு மற்றும் நீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 3/4 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். (அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம்)

* மாவு நல்ல பதத்தில் உள்ளதா என்பதை கண்டறிய நீரில் அரைத்த மாவை சிறிது போடும் போது, அது மிதந்தவாறு இருந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.

Muttaikose Vadai Recipe In Tamil
* பின்னர் அரைத்த மாவை ஒரு பௌலில் எடுத்து, அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் போட்டு எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.

Related posts

சூப்பரான பஞ்சாபி சன்னா மசாலா இருந்தால் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும்

nathan

சுவையான வல்லாரைக் கீரை துவையல்

nathan

தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

nathan

சுவையான வெஜிடேபிள் அவல் உப்புமா

nathan

பீர்க்கங்காய் பொரியல்

nathan

பூசணி சாம்பார்

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan

சுவையான வெந்தய குழம்பு

nathan

முட்டை சால்னா

nathan