கர்ப்பிணி பெண்கள் போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகவும் அமைகிறது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் ஊட்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எதெல்லாம் சாப்பிடவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். சீஸ், யோகர்ட், பால் மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 1,000 மி.கி அளவு சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல கொழுப்பு – எண்ணெய், நெய் ஆகியவற்றில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இவற்றை வாரம் ஒரு முறை சேர்த்து கொள்ளலாம்.
கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்துகளை நமது உடல் சீராக பயன்படுத்த வைட்டமின் பி6 உதவும். பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், வாழைப்பழம், முழுதானிய வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 காணப்படும்.
கீரை வகைகள், கமலாப்பழச் சாறு, பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றில் அதிகம் காணப்படும். சிசுவிற்கு பிறவியில் ஏற்படும் நரம்புமண்டலக் குறைபாடுகளை தவிர்க்க பிரசவகாலத்தின் முதல் 12 வாரங்களில் 200 மி.கி ஃபோலேட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிசுசின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. சிசுவின் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து உதவும். மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.