சைவம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்
தேவையான பொருட்கள் :

வெண்பூசணிக்காய் – அரை கிலோ
பச்சை அரிசி – 200 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
ப.மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
உப்பு – சுவைக்கு

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெண்பூசணியை துருவி மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். அத்துடன் தண்ணீரை சேர்க்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி ஒரு பங்கிற்கு 3 பங்கு பூசணி தண்ணீர், உப்பு கலந்து வேக வையுங்கள். வெந்த பின்பு இறக்கி, சாதத்தை ஆறவையுங்கள்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்த பின் வெங்காயம் ப.மிளகாயை போட்டு சிறிது வதக்கிய பின் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

* அவற்றை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டி, நன்றாக கிளறுங்கள்.

* உடலுக்கு வலுசேர்க்க இந்த சாதம் செய்து சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் சாதம் இது.
201605231032106852 Pumpkin Rice cooling body SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button