24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
04 bread toast masala
சமையல் குறிப்புகள்

பிரட் மசாலா டோஸ்ட்

காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால், பிரட் மசாலா டோஸ்ட் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இதில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த பிரட் மசாலா டோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Bread Masala Toast Recipe For Breakfast
தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 2
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை போட்டு, 1-2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து சாம்பார் பொடி, கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி, டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் தடவி பரிமாறினால், பிரட் மசாலா டோஸ்ட் ரெடி!!!

Related posts

சுவையான காளான் மக்கானி

nathan

மஞ்சள் வெங்காய சட்னி

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

சிலோன் சிக்கன் பரோட்டா…

nathan

சுவையான காரமான பட்டாணி ரெசிபி

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

சேனைக்கிழங்கு மசாலா

nathan

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika