25.3 C
Chennai
Saturday, Jan 18, 2025
fashionsilksaree3
ஆரோக்கியம் குறிப்புகள்

பல வருடங்கள் ஆனாலும் பட்டுப்புடவை பளபளன்னு மின்ன வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு உரிய ஆடை ‘சேலை’ தான். என்னதான் இன்றைய நவநாகரீகப் பெண்கள் சுடிதார், நைட்டி, ஜீன்ஸ்_டீசர்ட் என படு மாடர்னாக வலம்வந்தாலும் சேலைக்கு முன்பு அவையெல்லாம் சுண்டைக்காய்தான்!

அதேநேரம் சேலையை பராமரிப்பதே கஷ்டமான விசயம். அதிலும் பட்டுசேலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏதாவது முகூர்த்த காலங்களில் நெருங்கிய சொந்தங்களின் திருமணங்களின் போதுதான் அவற்றை எடுத்து தூசிதட்டுவோம். ஆனால் இந்த பட்டுசேலைகளை சூப்பராக பராமரிக்க ஒரு சிறப்பான வழி இருக்கிறது.

பொதுவாக பட்டுசேலையை தரமானதா என கண்டுபிடிப்பதற்கு, சேலை ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி தீவைத்தால் அது நிதானமாக விளக்குத்திரி போல் நின்று எரிந்தால் நல்லபட்டு. அதேபோலி பட்டு என்றால் திபு, திபுவென எரியும். உண்மையான பட்டுசேலை நூறுவருடங்கள் வரை கெடாது.

பட்டைப் பொறுத்தவரை துவைக்கமுடியாது என்பதால் 6 மாதங்களுக்கு ஒருமுற வெயிலில் ஒருமணிநேரம் காயவைக்கவேண்டும். உடுக்கும் போதெல்லாம் மடிப்பை மாற்றி வைத்தாலும் ஆயுள் கூடும். அப்படியே வைக்கக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் உங்கள் பட்டும் ஆண்டுகள் போனாலும் பள, பளவென இருக்கும்.

Related posts

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தணுமா?

nathan

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

இதை பயன்படுத்தி பாருங்கள் ..! கருமையான கூந்தல் வேண்டுமா..?

nathan

உங்க வீட்டை வாசனையாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இதோ குறிப்புகள்…!

nathan

உடலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி இலைகள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்!

nathan

வேர்குருவை தடுக்க கூடிய வீட்டு மருத்துவம்

nathan

பெண்களே தளர்ந்த மார்பகங்களை சரிசெய்ய வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan