bittergourd dal
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கான… பாகற்காய் தால்

இதுவரை பாகற்காயைக் கொண்டு பொரியல், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு தால் செய்திருக்கமாட்டீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் சிம்பிளான பாகற்காய் தால் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளது.

இந்த பாகற்காய் தால் நீரிழிவு நோயாளிகளின் வாய்க்கு சுவைத் தரும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பாகற்காய் தால் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Bitter Gourd & Toor Dal Curry
தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்‘
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பாகற்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றம் பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மற்றொரு அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, லேசாக கடைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை வாணலியில் ஊற்றி, அத்துடன் உப்பு, புளிச்சாறு, நாட்டுச்சர்க்கரை, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் மீண்டும் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பிறகு மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், பாகற்காய் தால் ரெடி!!!

Related posts

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

nathan

ஒரே வாரத்தில் எடையை இரு மடங்கு வேகமாக குறைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க… எடை சும்மா விறுவிறுனு குறையும்

nathan

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

nathan

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika

நெஞ்செரிச்சலை குணமாக்கும் உணவுகள்

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் இயற்கை உணவுகள் !

nathan