28.6 C
Chennai
Monday, Sep 30, 2024
06 1494073416 ginger 1
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்க குளிக்கிற தண்ணில, இஞ்சி ஒரு டீஸ்பூன் கலந்து குளிங்க கண்டிப்பா இந்த மாற்றம் உங்க உடம்பில நடக்கு…

டிடெக்ஸ் (Detox) குளியல் என்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்வில் பல அழுக்குகளை நாம் உடலில் சேர்க்கிறோம். உங்கள் உடலை சுத்தப்படுத்த ஒரு வழக்கமான வழியை உருவாக்குவது அவசியம். நச்சுகள் எல்லா இடங்களிலும் காணப்படலாம், நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீரில், நாம் எடுக்கும் மருந்துகளில், ஏன் நாம் சுவாசிக்கின்ற காற்றில் கூட. நமது உடலைத் தீங்குவிளைவிக்கும் அசுத்தங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது முடியாத காரியம்.

ஏன் டிடெக்ஸ் குளியல்?
நிறைய பேர் தங்களுடைய நாளை ஒரு சூடான ஷவரில் குளித்து தொடங்குகின்றனர். அந்த நீரில் கூட நாம் அன்றாடம் பயன்படுத்தும், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. ஏன் நாம் பல் துலக்கும் பேஸ்ட்டில் கூட ஃபுளூரைடு அடங்கியுள்ளது. குளியலுக்கு பின்னர் கட்டாயமாக நாம் பூச்சிக்கொல்லிகள் அடித்து விளைந்த காய்கறிகள் அல்லது மரபணு மாற்றப்பட்ட உணவுகளை தான் எடுத்துக்கொள்ள போகிறோம். நீங்கள் வீட்டில் இருக்கும் போதே இவ்வளவு நச்சுக்களை உடலில் சேர்த்து வைத்துக்கொள்கிறீர்கள். எனவே இந்த நச்சுக்களை நீக்க கட்டாயம் ஒரு தீர்வு தேவை. அதற்கான தீர்வு தான் டிடெக்ஸ் குளியல்.

இஞ்சி குளியல்
டிடெக்ஸ் குளியலில் மிகவும் நல்ல பலன்களை தருவது, இஞ்சி குளியல். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மட்டும் அல்ல. உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கவும் உதவுகிறது. இஞ்சி பல ஆரோக்கியமளிக்கும் பண்புகளை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமாக உள்ளன. இது அழற்சியை தடுக்கிறது. தினமும் இஞ்சி குளியல் எடுப்பது கோளரெக்டல் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு நோயிலிருந்து நம்மை காக்கும்.

இஞ்சி குளியல் எப்படி எடுப்பது?
தேவையான பொருட்கள்
அரைகப் புதிய இஞ்சி அல்லது ஒரு மேசைக்கரண்டி அளவு இஞ்சி பவுடர். தாங்கும் அளவு சூடான நீரால் நிரப்பப்பட்ட குளியல் தொட்டி ஒரு கப் பேக்கிங் சோடா.

எவ்வாறு தயார் செய்வது?
தாங்கும் அளவு சூடான நீரால் குளியல் தொட்டியை நிரப்ப வேண்டும். இஞ்சி மற்றும் பேக்கிங் சோடாவை அதில் நிரப்ப வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

குறிப்பு:
இந்த குளியலுக்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிக அளவு வியற்வை வெளியேறும் எனவே நீங்கள் இந்த குளியலை காலையில் எடுப்பதை விட இரவில் எடுப்பது சிறந்தது. இந்த குளியலால் உங்களது சரும துளைகள் விரிவடையும் என்பதால் சோப்புகள் அல்லது ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டாம்.06 1494073416 ginger 1

Related posts

வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

இழந்த அழகை மீட்டுத்தரும் குங்குமப்பூ

nathan

‘உலர் கண் நோய்’ எச்சரிக்கை “கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்”

nathan

பணத்தை விட காதலை அதிகம் விரும்பும் நேர்மையான 5 ராசிக்காரங்க யார் தெரியுமா?

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை

nathan

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

sangika

பாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.?

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களின் அடிப்படை குணம் என்ன தெரியுமா?

nathan

‘செக்’ பண்ணி பாருங்க! உங்கள் ‘பிளட்’ குரூப்பை வைத்து…. நீங்கள் எப்படிப்பட்டவர்? ‘என்பதை’ கணிக்கலாம்…

nathan