பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு ஆண்கள் எவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கோரப்பட்டாலும், பலருக்கும் இது சம உரிமை சார்ந்த விஷயமாக உள்ளது.
எனவே எது சரி? அதைவிட எவ்வாறு சிறுநீர் கழித்தால் ஆணுக்கு சிறந்தது?
பல ஆண்களுக்கு நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது சிரமமாகதான் இருக்கும். ஆனால் அதே சமயம் அதுதான் உடனே செய்யக்கூடியது, அதாவது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதனால்தான் ஆண்கள் கழிவறையில் அதிக கூட்டம் காணப்படுவதில்லை.
ஆண்கள் வேகமாக சிறுநீர் கழிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, அவர்கள் ஆடைகளை அகற்ற வேண்டாம்.
இரண்டாவது ஆண்கள் சிறுநீர் கழிக்கும் யூரினல் எனப்படும் கழிவறைகள் குறைந்த இடத்தில் அதிகம் அமைக்கப்படுவதால் மிக குறைந்த நேரமே ஆகும்.
ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images
பல ஆய்வுகள் நாம் சிறுநீர் கழிக்கும் நிலையை பொறுத்து நமது சிறுநீரின் அளவு மாறுபடும் என கூறுகின்றன.
நாம் எவ்வாறு சிறுநீர் கழிக்கிறோம் என்று பார்ப்போம்; நமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது. அதுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது.
அதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்; அதனால்தான் நாம் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.
சிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்.
நாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றும், எப்போது சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.
ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை
நாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.
அதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.
ஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது.
ஆனால் சில சமயங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீர் கழிப்பதில் ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images
விரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.
உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது.
நீங்கள் என்ன செய்யலாம்?
பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அது சரி என்பதை நிரூபிக்கும் ஆய்வு எதுவும் இல்லை.
2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆண்கள் கழிவறைபடத்தின் காப்புரிமை Getty Images
கழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஆண்மைத் தன்மை நிறைந்தது என்றும் பார்க்கப்படுகிறது.
சில வீடுகளிலும் கூட இந்த குறியீடுகள் வைக்கப்பட்டிருக்கும். 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில், வீட்டு உரிமையாளர் ஒருவர், அந்த வீட்டில் குடியிருந்தவர் சிறுநீர் கழித்து தனது கழிவறையின் தரையை நாசாமாக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆனால் அது சட்டப்படி செல்லாது என்றும், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது இன்னும் முறையில் உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துவிட்டார்