23.1 C
Chennai
Monday, Dec 16, 2024
greenvegetables
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்த குறைவு உள்ளவர்களுக்கான சிறப்பான சில உணவுகள்!!!

தற்போது பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவர்களுக்கு உட்கார்ந்து எழும் போது தலை சுற்றல் ஏற்படுவதோடு, அதிகப்படியான சோர்வு, மங்கலான பார்வை, குமட்டல், போன்றவையும் ஏற்படும்.

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

இந்த நிலை ஏற்படுவதற்கு உடலுறுப்புகளுக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைவது தான் காரணம். முக்கியமாக இந்த இரத்த அழுத்த குறைவு நீடித்தால், அவை இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவை குறைத்து, மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

 

பொதுவாக குறைவான இரத்த அழுத்தம் இருப்பவர்கள், உப்புள்ள அல்லது சர்க்கரை மிகுந்த உணவுகளை உட்கொண்டால், இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த அழுத்தத்தின் அளவு சீராகும்.

 

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை இரத்த அழுத்த குறைவு அல்லது குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான ஒருசில சிறப்பான உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்

பச்சை இலைக்காய்கறிகளில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால், அவற்றை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும் போது, அதை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

ஓட்ஸ்

டயட்டில் ஓட்ஸ் சேர்த்து வந்தால், அதில் இருக்கும் நார்ச்சத்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கி, மயக்கம், சோர்வு போன்ற இரத்த அழுத்த குறைவிற்கான அறிகுறிகளைத் தடுக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் இதயத்திற்கு மட்டும் நல்லதல்ல. இவற்றை உட்கொண்டு வந்தால், குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நல்லது.

நட்ஸ்

நட்ஸ் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். ஆகவே குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நட்ஸை அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள்.

தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள்

தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளான கோழி, வான்கோழி போன்றவை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுகள். ஆகவே இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது.

காய்கறிகள்

காய்கறிகளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது- எனவே இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் காய்கறிகளை அதிகம் உட்கொண்டு வருவது, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

பழங்கள்

பழங்களில் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. எனவே பழங்களையும் அதிகம் டயட்டில் சேர்த்து வர வேண்டும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இதனை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் இதனை உட்கொண்டால், இதயம் வலிமையடையும்.

சிட்ரிக் உணவுகள்

சிட்ரிக் ஆசிட் நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொண்டு வந்தால், கோடையில் ஏற்படும் உடல் வறட்சி நீங்குவதோடு, உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.

முழு தானியங்கள்

முழு தானியங்களை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.

பூண்டு

டயட்டில் பூண்டு சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் சிறிது பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட்

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த மற்றொரு காய்கறிகளில் ஒன்று தான் பீட்ரூட். இதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

காய்கறி ஜூஸ்கள்

காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஜூஸ்களை அவ்வப்போது குடித்து வந்தால், குறைவான இரத்த அழுத்த பிரச்சனை குணமாகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… எந்த உணவுகளை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்

nathan

ஒத்தைப்பல் பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சுகோங்க! முட்டையில் கொழுப்பா? தினமும் முட்டை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா?

nathan

காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்

nathan

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

கறிவேப்பிலை சட்னி

nathan