மகிழ்ச்சியான குடும்பத்திற்கு குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்திருக்க வேண்டும், அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலை, பொருளாதார காரணங்கள் ஆகியவை சீராக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்று என்னென்னவோ பட்டியலிட்டாலும், இவற்றிற்கு அடிப்படையாக ஒரு விஷயம் தேவை.
இவை அத்தனையையும் ஆட்டிப்படைக்கிற விஷயமாக அது இருக்கிறது. எல்லாருக்கும் மகிழ்ச்சியான சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமைகிறதா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கு மாற்று வழி என்ன என்று யோசித்தோமேயானால் நீங்கள் வசிக்கிற வீடு கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆம், வாஸ்து சாஸ்திரப்படி அந்த வீடு அமையவில்லையெனில் கணவன் மனைவிக்கு இடையே சண்டையில் ஆரம்பித்து ஏராளமான துயரங்கள் வந்து சேரும்.
#1
பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவை ஒரு வீட்டிற்கு சமமானதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ அது கெடுதலைத் தான் கொடுக்கும்.
இந்த ஐந்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை குறிக்கிறது. அந்த திசைக்கு ஏற்ப நாம் நம்முடைய விட்டினை வடிவமைத்திருக்க வேண்டும்.
#2
வீட்டின் வடகிழக்கு பகுதியில் தண்ணீர் சமாச்சாரங்கள் இருக்கவேண்டும், தண்ணீர் தொட்டி இங்கே வைக்கலாம். அப்பகுதியில் எந்த வித இடஞ்சலும் இல்லாமல் திறந்த வெளியாக விட்டால் அது கணவன் மனைவி அன்னியோன்னியத்தை அதிகரிக்கச் செய்திடும். அதோடு பண வரவுக்கும் பஞ்சமிருக்காது.
#3
வடகிழக்கு திசையின் பக்கத்தில் பூஜையறை அமைக்கலாம். இங்கே நீங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நடமாட்டம் இருக்கிற மாதிரியான சமையலறை,பூஜையறை,கழிவறை போன்றவை இருக்கலாம்.
#4
வீட்டின் தென் கிழக்கு பகுதி நெருப்பினைக் கொண்டுள்ளது. இங்கே சமையளறை, கரண்ட் தொடர்பான சாதனங்களை இங்கே வைக்கலாம். இந்தப் பகுதியில் தண்ணீர் தொடர்பான விஷயங்களை வைப்பதை தவிர்க்கவும்.
ஏனென்றால் நெருப்பும் தண்ணீரும் அருகருகே இருக்க முடியாது அல்லவா? இந்தப் பகுதியில் குடும்பத்துடன் படுக்கக்கூடிய மாஸ்டர் பெட்ரூம் இருந்தால் தொடர்ந்து வீட்டில் சண்டை சச்சரவுகள் எழுந்துகொண்டேயிருக்கும்.
#5
வீட்டின் வடமேற்கு பகுதியில் காற்றின் பகுதியாகும். இங்கே கண்டிப்பாக சிறிய அளவிலாவது ஓப்பன் ஸ்பேஸ் இருக்க வேண்டும். இது இல்லாதபட்சத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே மனஸ்தாபங்கள் நீடிக்கும்.
ஒவ்வொரு உறவுக்கும் இடையில் அந்த உரையாடல் தான் அடிப்படை, அந்த உறவை தாங்கிப் பிடிக்கும் ஆணிவேர் என்று சொல்லலாம். அதுவே சீர்குலையும் என்றால் மொத்த குடும்பமே ஆட்டம் காணும்.
#6
அப்பகுதியை அடைத்திருந்தால் உங்களுக்கு மன ரீதியான தாக்கங்கள் இருக்கக்கூடும், இதன் சாரத்தை குறைக்க அப்பகுதியில் கழிவரையைக் கட்டுங்கள் அல்லது அப்பகுதியில் இருக்கக்கூடிய அறையின் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இது தற்காலிக தீர்வாக அமையும்.
#7
தென்மேற்கு பகுதி நிலப்பகுதியாகும். இங்கே மாஸ்டர் பெட்ரூம் இருக்கலாம். இது தம்பதிகளிடையே அன்னியோன்னியத்தை பலப்பெற வைக்கும். இங்கே ஸ்டோர் ரூம் இருக்கலாம். இந்தப் பகுதிகளில் கழிவறை, சமையலறை மற்றும் வாட்டர் டேங்க் அது மேல்நிலைத் தொட்டியாக இருந்தாலும்,அண்ட்டர் கிரவுண்ட் தொட்டி இரண்டுமே இருக்கக்கூடாது.
#8
வீட்டின் நடு இடத்தினை பிரம்மஸ்தானம் என்று அழைக்கிறார்கள். இந்த இடம் காற்றுக்கான இடம், இங்கேயும் காற்று எளிதாக நுழையும் வகையில் வெளி இருக்க வேண்டும். அதனை அடைத்து அதிக பாரத்தை ஏற்றியிருந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை குழையும்.
#9
வீட்டின் தென்மேற்கு பகுதியில் படுக்கையறை இருக்கலாம். தென் கிழக்கு பகுதியில் படுக்கையறை வேண்டாம் ஏனென்றால் இது நெருப்பிற்கான இடம். இந்த இடத்தில் படுக்கையறை இருந்தால் அவை தம்பதிகளின் ஒற்றுமையை சீர்குலைத்திடும்.
அதே போல படுக்கையறைக்குள் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கட்டில் போட வேண்டாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தினை கொடுத்திடும். அதோடு சிலருக்கு பணப்பிரச்சனைகளையும் உருவாக்கும். எப்போதும் தெற்கு பகுதியில் தலைவைத்து படுத்திடுங்கள்.
#10
படுக்கயறை கட்டும் போது அதன் வடிவம் சதுரம் அல்லது செவ்வக வடிவத்திலேயே இருக்கட்டும். அவை தான் குடும்பத்தில் அமைதியை நிலைக்க வைக்கும் . இளம் நிறங்களான ரோஸ் பிங்க்,லைட் ப்ளூ போன்ற மைல்ட் கலர் பெயிண்ட் அடிக்கலாம். சிகப்பு மற்றும் சிகப்பு சார்ந்த வண்ணங்களை படுக்கையறைக்கு வேண்டாம்.
#11
கிச்சன் பொருட்களான கேஸ்,சிங்க் ஆகியவற்றையும் சரியான இடத்தில் வைக்க வேண்டும் ஏனென்றால் ஒன்று நெருப்பினைக் குறிக்கிறது இன்னொன்று தண்ணீரைக் குறிக்கிறது.
கேஸ் தென்கிழக்கு பகுதியிலும் சிங்க் வட கிழக்கு பகுதி அல்லது வடக்கு பகுதியில் அமைக்கலாம். வீட்டில் பணம் சேமிக்கும் பீரோ, அல்லது நகைகள், விலையுயர்ந்த பொருட்களை வைக்கக்கூடிய கப்போர்ட் ஆகியவற்றை கிழக்கு அல்லது வடக்கு பகுதிகளில் வைக்கலாம்.
#12
புதிதாக திருமணமானவர்கள் என்றால் அவர்களுக்கு வடகிழக்கு பகுதியில் படுக்கையறை வேண்டாம். அதேபோல உள்ளே கட்டப்பட்டிருக்ககூடிய பீமுக்கு கீழே உங்களது கட்டில் இருக்கக்கூடாது. இது உங்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உள்ளே சுவர் கண்ணாடி மாட்டுவதை தவிர்க்கவும். இது இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகளை உருவாக்கிடும். கண்ணாடி மட்டுமல்ல உங்கள் பிம்பத்தை பிரதிபலிக்கக்கூடிய எந்த பொருட்களும் உள்ளே இருக்கக்கூடாது.
#13
உங்களது படுக்கையறைக்குள் டிவி அல்லது கணினி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மறக்காமல் அதனை துணியைக் கொண்டு மூடிவிடுங்கள். தெற்கு மற்றும் மேற்கு அல்லது தென் மேற்கு ஆகிய திசைகளில் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டாம். அதே போல அந்தப் பகுதியில் கெட்ட சகுனங்களைக் குறிக்கும் ஒவியங்கள்,புகைப்படங்கள் எதுவும் வேண்டாம்.
#14
வாழ்க்கையின் வெற்றி என்பது வாழுகின்ற தம்பதிகளின் அன்னியோன்னியத்தை பொறுத்தே அமைந்திடும், அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கை அமையவேண்டும் என்றால் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இதெல்லாம் ஒரு விஷயமா? ஏன் நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் பார்க்கிற சின்ன சின்ன விஷயங்கள், ஈகோ பிரச்சனை ஆகியவை தான் பெரிய பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக அமைந்திடும்.
#15
வாஸ்து சாஸ்திரப்படி உங்களது வீடு அமையவில்லை என்றால் முக்கியமாக அதன் தாக்கம் வீட்டில் வாழுகின்ற தம்பதிகளிடையே தான் காட்டிடும், இப்போது நவீனம், நாகரிகம் என்று சொல்லி வீட்டு அலங்கார பொருட்கள் நிறைய வாங்கிக் குவிக்கிறார்கள். அதனை வைக்க வேண்டிய திசை, மற்றும் பகுதி தெரியாமல் வைத்து விட்டு இருக்கிற நல்ல வாஸ்துவைக் கூட இவர்களே சீர்குலைக்கிற நிலைமையும் உண்டு.
#16
சில நவநாகரிகமான வீட்டின் அலங்காரப் பொருட்களை வாங்கி வைப்பதற்கு முன்னர் அவை எப்படிப்பட்ட இண்டீரியர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதோட அதில் ஏற்படுகின்ற தாக்கத்தினால் கூட வீட்டின் மாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.
#17
வீட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே என பரவியிருக்கக்கூடிய காஸ்மிக் எனர்ஜியினால் கூட உங்களுக்கு பிரச்சனை எழலாம். சரியான விகிதத்தில் அந்த எனர்ஜி இல்லாத போது அது வீட்டில் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்கிடும். அதனை மாற்றும் விதத்தில் சிறிய வாஸ்து பொருட்களை வீட்டிற்குள் வைத்தால் மட்டும் போதுமானது.
#18
உங்கள் வீட்டின் படுக்கைற வடமேற்கு பகுதியில் தான் அமைந்திருக்க வேண்டும்.அதே போல படுக்கையறை கதவுகள் 90டிகிரிக்கு திறக்கப்பட வேண்டும். பாதி கதவு மட்டும் திறப்பது, நான் உள்ளே நுழைய முடிந்தால் போதுமென்று நினைத்திருப்பது தவறு.
இந்த கதவு தான் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்புகளை குறிக்கிறது.அதனால் கதவினை விசாலமாக திறந்து வைத்திடுங்கள்.
#19
பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப்படுகிற ஒரு விஷயம் என்றால் வடக்கில் தலை வைத்து படுக்காதே என்று எச்சரிப்பார்கள் அதோடு நம்மை பயமுறுத்த கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடுவார்கள். உண்மையில் என்ன காரணம் தெரியுமா?
வடக்கில் இருந்து தான் பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது.உடம்பில் இருக்கிற ரத்தத்தில் இரும்புச்சத்து இருக்கிறதல்லவா? அது வடக்கில் இருந்து கிடைக்கக்கூடிய எனர்ஜியை ஈர்க்கும். இதனால் தூங்கும் போது இடைஞ்சல்கள் உண்டாகும். மற்றும் உடல் நலம் பாதிப்படையும். அதனால் வடக்கில் தலைவைத்து படுக்காதே என்று சொல்லப்படுகிறது.