27.5 C
Chennai
Wednesday, Nov 6, 2024
Ladyfinger01
ஆரோக்கிய உணவு

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

“வெண்டைக்காய் சாப்பிட்டா நல்லா படிப்பு வரும்… கணக்கு நல்லா போடலாம்… மூளை நல்லா வேலைசெய்யும்” என சின்ன பிள்ளைகளுக்குச் சொல்லி வெண்டைக்காயைச் சோற்றில் வைத்து ஊட்டிவிடுவது உண்டு. வளர்ந்த பிறகு என்ன காரணங்களைச் சொன்னாலும், தட்டின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்களே அதிகம். வெண்டைக்காயை ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டால், அனைவரும் சொல்லும் ஒரே பதில், அதன் வழுவழுப்புத் தன்மை. ஆனால், இதில் உள்ள மருத்துவ நன்மைகள் நம் உடலில் முழுமையாக வேலைசெய்து நோய்களை விரட்டும் என்பதே உண்மை.

டயாபடீக் டிரிங்க்

சிம்பிள் டிரிங்க்தான் இது. ஆனால், மிகவும் ஆற்றலுடன் வேலை செய்யும்.

நான்கு ஐந்து வெண்டைக்காயைக் கழுவி, இரு ஒரங்களையும் நறுக்கி, அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை, இந்த நீரைக் குடித்துவர, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவது உறுதி. சர்க்கரை நோயாளிகளைப் பாடாய்படுத்தும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் மந்திரம் வெண்டைக்காய்க்கு உண்டு.

ஸ்லிம்மாக இருக்க

வெண்டைக்காயை சாம்பார், குழம்பு, அவியல், பொரியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இருமுறை சேர்த்துக்கொண்டாலும் உடலில் படிந்து உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்துகொண்டே வரும். இதயப் பிரச்னைகள், உடல்பருமனால் ஏற்படும் தொல்லைகள் தவிர்க்கப்படும்.

மாதவிடாய் பிரச்னைகளைச் சரி செய்ய…

மாதவிடாய் வருவதற்கு முன்னும், பின்னும் பெண்களைப் பாடாய்ப்படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு, வெண்டைகாய்.

இளசாக இருக்கும் வெண்டைக்காயை சிறியதாக அரிந்துகொண்டு, அதை இரண்டு கப் தண்ணீரில் 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவைக்கவும். ஆறிய பிறகு ஒரு நாளைக்கு மூன்று பங்காகப் பிரித்து, மூன்று வேளைக்கு அந்த நீரைப் பருகிவர வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

சில பெண்களுக்கு வெள்ளை திரவம் நிறம் மாறி, மஞ்சளாக வரும். இந்தப் பிரச்னையும் குணமாகும். உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

குழந்தையின் முதல்கட்ட வளர்ச்சிக்கு…

கர்ப்பிணிகளுக்கு பி வைட்டமின் சத்து முக்கியம். குழந்தையின் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு இந்த சத்து அவசியமாகிறது. ஃபோலிக் ஆசிட் சத்து இருப்பதால், புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. கருக்கலைப்பு ஆகாமலும் தடுக்கின்றன. வெண்டைக்காயை, கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த 4-வது வாரம் முதல் 12-வது வாரம் வரை அடிக்கடி சாப்பிட்டு வர குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சி சீராக இருக்கும்.

ஹேர் கண்டிஷனராக…

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் பளபளப்பான, அலைபாயும் கூந்தலைப் பெற உதவும். மேலும், முடி வளர்ச்சிக்கு உதவும் காப்பர், ஜின்க், பொட்டாசியம், ஃபோலேட், தயமின் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

8-10 வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து, அதாவது கிடைவாக்கில் நறுக்கி, ஒரு கப் தண்ணீரில் போட்டு, சிம்மில் வைக்கவும். பசை போன்ற பதம் வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்துவிட்டு, அதில் ஐந்து துளிகள் லாவெண்டர் எண்ணெய் அல்லது புதினா எண்ணெயைக் கலந்து குளிர்ச்சியாகும் வரை அப்படியே விட்டுவிடலாம். இதை அப்படியே வடிகட்டி, அந்த நீரை மட்டும் பாட்டிலில் சேகரித்து ஹோம் மேட் ஹேர் கண்டிஷனராக, தடவிய ஐந்து நிமிடங்களுக்குப் பின் கூந்தலை அலச, கூந்தல் பளபளப்புடன் மென்மையாக இருக்கும்.
Ladyfinger01

Related posts

உங்களுக்கு தெரியுமா சத்தான டிபன் ராகி உப்புமா செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கிழங்கை இந்தப் பொருளுடன் இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்…!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! வயிற்றுபுண்ணை குணமாக்கும் அத்திக்காய்.. பொரியல் செய்வது எப்படி?

nathan

பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துகோங்க!

nathan

உங்க வீட்டில் இந்த உணவுகள் மிச்சமாயிடுச்சா? கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.

nathan

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன்களா..?!!

nathan