தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி – 3 கப் (பொடியாக நறுக்கியது)
* சீஸ் – 1 கப் (தருவியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* முட்டை – 2
* பிரட் தூள் – 1 கப்
செய்முறை:
* முதலில் ஓவனை 200 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும். அதன் பின் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ப்ராக்கோலியை போட்டு 3 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு ப்ராக்கோலியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Broccoli Kebab Recipe In Tamil
* பின்பு ஒரு பௌலில் வேக வைத்த ப்ராக்கோலியை எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, சீஸ், பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போன்று தட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்க வேண்டும்.
* பின் அந்த பேக்கிங் ட்ரேயை ஓவனில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஓவனில் க்ரில் மோடை தேர்வு செய்து, ட்ரேயை மீண்டும் ஓவனில் வைத்து 4-5 நிமிடம் க்ரில் செய்து எடுத்தால், சுவையான ப்ராக்கோலி கபாப் தயார்.
குறிப்பு:
உங்கள் வீட்டில் ஓவன் இல்லாவிட்டால், பேனில் இந்த கபாப்களைப் போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்யலாம்.