தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி – 2
பூண்டு – 4 பல்
தெருவே மணக்கும் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு! வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் | Nethili Dry Fish Thokku In Tamil
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சிறிது சூடான பின்பு சிறிது எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு பூண்டு, நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுள் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்பு நன்கு கழுவி சுத்தம் செய்த கருவாட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்பு தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி சேர்த்து பக்குவமாக கலந்து விடவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
நன்கு கொதித்து வந்த பின்னர் எண்ணெய் மேலாகப் பிரிந்து வரும் பொழுது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் கமகமக்கும் கருவாடு தொக்கு தயார்…