கருப்பட்டி, ராகி மாவு இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இப்போது சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
கருப்பட்டி – கால் கப்
துருவியத் தேங்காய் – 1/4 கப்
ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி – சிறிது
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
* கருப்பட்டியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, வடிகட்டிய கருப்பட்டி தண்ணீர், ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.
* சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம் ரெடி.