26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
1453895770 6449
சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய வரிசையில் ஆரோக்கியம் தரும் கம்பு ரொட்டி

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

தேவையானவை:

கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.1453895770 6449

Related posts

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

முப்பருப்பு வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் வாழைப்பழ போண்டா

nathan

சுவையான அடை தோசை

nathan

முந்திரி வடை

nathan