சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய வரிசையில் ஆரோக்கியம் தரும் கம்பு ரொட்டி

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

தேவையானவை:

கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

Related posts

சுவையான பாதாம் பூரி

nathan

முட்டை கோதுமை நூடுல்ஸ்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

nathan

பெப்பர் அவல்

nathan

முந்திரி வடை

nathan

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக்

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan